பாஜக செயற்குழு உறுப்பினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!!

பாஜக செயற்குழு உறுப்பினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!!

Update: 2022-03-10 05:45 GMT

தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா என  கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஜக பிரமுகர் கல்யாணராமனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கல்யாணராமன் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News