சென்னையில் பரபரப்பு.. நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்..!

சென்னையில் பரபரப்பு.. நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்..!

Update: 2022-06-23 12:01 GMT

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் தந்தை பாலாஜி, உறவினர் ஆனந்த், காமாட்சி ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி செல்வதற்காக வேளச்சேரி மெயின் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார்.

வேளச்சேரி காந்தி சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு பிரசன்ன வெங்கடேஷ் காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

உடனடியாக காரில் இருந்த 4 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

இதைப்பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படி அப்படியே நிறுத்தியதால், வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News