ஓய்வு பெறுகிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி..!
ஓய்வு பெறுகிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி..!
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த பெண் நீதிபதியாக பதவி வகித்து வரும் புஷ்பா சத்தியநாராயணா நாளை (27-ம் தேதி) ஓய்வு பெறுகிறார்.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். அத்துடன், கல்வி நிறுவன பணியாளர்களுக்கு இஎஸ்இ பொருந்தும் என்று தீர்ப்பளித்த 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை வகித்தார்.
சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது, சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது குறித்த வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கியது உள்ளிட்டவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அளித்த தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது.
ஹாக்கி விளையாட்டு வீராங்கனையான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பதவி வகித்த 8 வருடங்கள் 3 மாதங்களில் 38 ஆயிரத்து 206 வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார்.