சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் டீசர்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் டீசர்..!!
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், இதன் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை நேற்று இரவு 7.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
#ChessChennai2022 pic.twitter.com/tiZeCN0a5v
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022
#ChessChennai2022 pic.twitter.com/tiZeCN0a5v
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022