நீலகிரி கைவினைக்கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

நீலகிரி கைவினைக்கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

Update: 2022-03-10 04:45 GMT

சர்வதேச மகளிர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான ‘மகளிர் சக்தி விருது’களை டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் சிறந்த சாதனைகளை புரிந்த 29 பெண்களுக்கு (ஆண்டுக்கு 14 விருதுகள் வீதம்) 28 விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் ஜெயா முத்து மற்றும் தேஜம்மாள் ஆகிய இருவரும் 2020-ம் ஆண்டின் ஒரு விருதுக்கு தகுதி பெற்று இருந்தனர். சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி 2021- ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதி பெற்று இருந்தார். 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் கொரோனா தொற்று காரணமாக வழங்கப்படாமல் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

“2020-ம் ஆண்டுக்கான ‘மகளிர் ஆற்றல்’ விருதினைப் பெற்றுள்ள நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து மற்றும் கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, 2021-ம் ஆண்டுக்கான விருதினைப் பெற்ற மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.


 

Similar News