வெற்றி வேட்பாளர்களை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

வெற்றி வேட்பாளர்களை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Update: 2022-02-24 04:30 GMT

தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சியினரை நேரில் அழைத்து தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'முப்பதுக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்த வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்- அவர்களது குடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னைச் சந்தித்து வெற்றிக் களிப்பைப் பகிர்ந்துகொண்டனர்.

உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது. விடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன்.' என பதிவிட்டுள்ளார்.


 

Similar News