பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Update: 2022-02-12 04:15 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கன்னியாகுமரியில் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் பேசியதாவது, “தமிழில் வணக்கம் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் நினைக்கிறார். தமிழ்நாட்டு மக்களை எப்போதும், யாராலும் ஏமாற்ற முடியாது. ஏமாறவும் மாட்டார்கள். கூட்டாட்சி தத்துவம் பற்றி ராகுல் காந்தி கூறியது ஏன் பிரதமருக்கு கசக்கிறது?” என்றார்.

Similar News