பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையின் போது பலமுறை ஒன்றிய அரசு என்று கூறியது அரங்கை அதிர வைத்தது.
தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமருக்கு நன்றி கூறினார். இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. சமூகநீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழ்நாடு வளர்ச்சி. இந்த வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுகிறோம்.
ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6%. ஆனால் ஒன்றிய அரசின் வருவாயில் தமிழ்நாட்டுக்கு 1.21% மட்டுமே வருகிறது என்றார்.
பயனாளிகள் செலுத்தமுடியாத தொகையை மாநில அரசே செலுத்தவேண்டிய நிலை உள்ளது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி ஆகும் என்றார்.
கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம், ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது மேலும் 2 ஆண்டு காலத்துக்கு நீட்டிக்க வேண்டும், தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைத்தார்.
மேலும் நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். உரையின் போது முதலமைச்சர் பலமுறை ஒன்றிய அரசு என்று கூறியதால் அரங்கமே அதிர்ந்தது.
newstm.in