முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபம்.. சிறைக்கு செல்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் !!

முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபம்.. சிறைக்கு செல்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் !!

Update: 2022-04-07 08:45 GMT

தருமபுரி மாவட்டத்தில் திமுகவின் மிக முக்கியமான நபராக வலம் வந்தவர் முல்லைவேந்தன். பள்ளி ஆசிரியராக தனது வாழ்வை தொடங்கி பின்நாளில் மேடை பேச்சில் வல்லவராக திகழ்ந்தார். அவரது சிறந்த அரசியல் பணியால் திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்தவர்.
1989, 1996, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். கட்சியில் சிறப்பாக பணி செய்த காரணத்தால் 1996ஆம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், ஒகேனக்கல் பகுதியில் அறநிலையத்துறை அதிகாரி ஒருவரை தனது ஆதரவாளர்கள் தாக்கிய புகாரில் சிக்கியதால் 2001 ஆண்டு தொடக்கத்தில் அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. 

அதன் பிறகு கட்சியில் அவரது செல்வாக்கு மெல்ல மெல்ல சரியத்தொடங்கியது. இந்தநிலையில், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு முறையான பதில் அளிக்காத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு அமைதியாக இருந்த அவர், 2016ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்து கொள்கை பரப்புச்செயலாளராக உயர்ந்தார். ஆனால், அங்கும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கவில்லை. கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது பார்க்க வந்த முல்லைவேந்தன், ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டார். ஆனால், பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில், தான் 2021 சட்டமன்ற தேர்தலின் போது தனது ஆதரவாளர்கள் சுமார் 5,000 பேருடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதன் பிறகு அதிமுக உறுப்பினராக மட்டுமே வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்து நேரில் சென்ற முல்லைவேந்தன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், நேற்று(ஏப்ரல் 5) தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழக அரசு சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 

அப்போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முல்லைவேந்தன் அவதூறாக ஒருமையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மீது அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது தி.மு.க.வினர் தர்மபுரி போலீசில் திமுகவினர் புகார் செய்தனர். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என கருதப்படுகிறது.  

newstm.in

Similar News