வரும் 26-ம் தேதிக்குள் ராஜினாமா.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
வரும் 26-ம் தேதிக்குள் ராஜினாமா.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
சென்னை அறிவாலயத்தில் நேற்று, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார் யார் பேசுவது, எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “சபையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தால் அவர்களை எதிர்த்து பேசும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். எதிர்க்கட்சி என்ற முறையில் அதிமுக அப்படி நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகவும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவியை வரும் 26-ம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். வரும் 30-ம் தேதி நடைபெறும் மண்டலக் குழு தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளை வழங்க வேண்டும்.
மறைமுக தேர்தலில் யார் யார் என்ன தவறு செய்தீர்கள் என்பது ஆதாரத்துடன் என்னிடம் இருக்கிறது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்” என்று அவர் பேசியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.