முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!
முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் தயாளு அம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தேறியதும் அவர் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.