முதன் முறையாக ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் - முதல்வர் அறிவிப்பு.!

முதன் முறையாக ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் - முதல்வர் அறிவிப்பு.!

Update: 2022-03-18 05:30 GMT

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு பகவந்த் மான் ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் தொடங்க இருப்பதாக அறவித்தார். மேலும் அந்த உதவி எண் வருகிற 23-ந்தேதி பகத்சிங்கின் தியாக தினத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-

'99 சதவீத மக்கள் நேர்மையானவர்கள். மீதமிருக்கிற 1 சதவீத மக்களால் நாட்டின் அமைப்பு உடைகிறது. எனவே பகத் சிங்கின் தியாக தினத்தன்று, ஊழலுக்கு எதிரான உதவி எண் தொடங்கப்படும். அது என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும்.

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்த வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை எனக்கு அனுப்புங்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பஞ்சாப்பில் இனி ஊழல் வேலைக்கு ஆகாது' என்று கூறியுள்ளார்

Tags:    

Similar News