முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிகாரிகள் அதிர்ச்சி !!
முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிகாரிகள் அதிர்ச்சி !!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும், 27 ஆயிரத்து 409 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதேபோல் மாநிலங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி திரும்புகின்றனர்.
இந்தச்சூழலில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பதிவில், தனக்கு சாதாரண அறிகுறிகளே இருப்பதாகத் தெரிவித்துள்ள சிவராஜ் சிங் சவுகான், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றித் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தனது பணியை காணொளி வாயிலாகச் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.
நாளை நடைபெறவிருக்கும் சிரோமணி ரவிதாஸ் ஜெயந்தியிலும் காணொளி வாயிலாகக் கலந்துகொள்வேன் எனவும் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவராஜ் சிங் சவுகானுக்கு தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
newstm.in