நடிகர் விஜய்யை சந்தித்த முதலமைச்சர்! வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய்யை சந்தித்த முதலமைச்சர்! வைரலாகும் புகைப்படம்!!

Update: 2022-02-05 19:09 GMT

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறதுதேர்தலில் வென்று கூட்டணி அரசு அமைத்து ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் ரங்கசாமி திடீரென நடிகர் விஜய்யை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜயை சந்தித்ததாக விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

Similar News