புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021&-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட
வளசரவாக்கம்,
தாம்பரம் மாநகரம் - சேலையூர்,
ஆவடி மாநகரம் - எஸ்ஆர்எம்சி
தாம்பரம் மாநகரம் - வண்டலூர்
வேலூர் மாவட்டம் - காட்பாடி
திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை ஊரகம்
கடலூர் மாவட்டம் - திட்டக்குடி
கரூர் மாவட்டம் - கரூர் ஊரகம்
புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைபட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு
திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை
கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம்
ஈரோடு மாவட்டம் - பெருந்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை
மதுரை மாவட்டம் - ஊமச்சிக்குளம்
திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஊரகம்
தேனி மாவட்டம் - பெரியகுளம்
ராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர்
திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மாதேவி
தென்காசி மாவட்டம் - புளியங்குடி
என 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.