புரிதல் இல்லாமல் ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்..!!

புரிதல் இல்லாமல் ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்..!!

Update: 2022-02-15 05:30 GMT

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 11 பேருராட்சிகளில்  பாஜக சார்பாக போட்டியிடும் 116 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் குன்னூர் வி.பி தெருவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “ஹிஜாப் விவகாரத்தில் பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம் ஆனால் பள்ளி கல்லூரிகளில் எந்த மதமாக இருந்தாலும் கட்டாயம் அந்த சீருடை மட்டுமே அணிய வேண்டும் மேலும் மதத்தை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்யாது இஸ்லாமியர்களாகட்டும் கிறிஸ்தவர்களாட்டும் யாராக இருந்தாலும் அருகில் வைத்து கொள்வோம்.

மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்றத்தை ஒத்திவைத்த விவகாரத்தை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதில் ஆளுநர் இரக்கமில்லாமல் தவறு செய்வதாகவும், மாநில அரசியலில் தலையீடு செய்வதாகவும் முதல்வர் குற்றம் சாட்டி இருந்தார். மாநில அரசும், மினிஸ்ட்ரி ஆப் கவுன்சில் எடுக்கும் முடிவையே ஆளுநர் எடுத்துள்ளார் என்ற புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு தமிழ்நாடு முதல்வர் ஏன் ட்விட்டரில் பதிவிட வேண்டும். இதுபோன்று ஒன்றிய அரசை வம்புக்கு இழுக்கும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக தெரியவில்லை. இதற்காக தமிழ்நாடு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறினார்.

Similar News