ஒரு நொடியில் நிகழ இருந்த விமான விபத்தில் இருந்து தப்பிய முதலமைச்சர்!!

ஒரு நொடியில் நிகழ இருந்த விமான விபத்தில் இருந்து தப்பிய முதலமைச்சர்!!

Update: 2022-03-08 08:22 GMT

தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாகவும், விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பியதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் கொல்கத்தா திரும்பிக் கொண்டு இருந்தார்.

இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மற்றொரு விமானம் மோதுவது போல் வந்ததாகவும் விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்ட சபையில் இந்த தகவலை மம்தா பானர்ஜி தெரிவித்தார். 10 வினாடிகள்  நேரே சென்றிருந்தால் விமானம் நேருக்கு நேர் மோதியிருக்கும் எனவும்  விமானியின் திறமையால் நான் உயிர்பிழைத்தேன் என கூறியுள்ளார்.

விமானம் 6 ஆயிரம் அடி கீழே இறங்கியது. நான் லேசான காயம் அடைந்தேன். எனக்கு இன்னும் வலி இருக்கிறது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்தோ, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டிலிருந்தோ எந்தவித அறிக்கையும் இதுவரை பெறவில்லை என கூறியுள்ளார்.

newstm.in

Similar News