“தாயுள்ளத்துடன் தமிழ்நாட்டை காக்கும் முதலமைச்சர்” : பிரபல இயக்குநர் புகழாரம்!!
“தாயுள்ளத்துடன் தமிழ்நாட்டை காக்கும் முதலமைச்சர்” : பிரபல இயக்குநர் புகழாரம்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்துடன் தமிழ்நாட்டை காத்து வருவதாக இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒருவர் மூன்றாவது முறையாக ஒருவர் சி.எம். ஆனால், அந்த சி.எம்., எப்படிப்பட்ட நிர்வாகத் திறமை குவாலிட்டியோடு இருப்பாரோ, அந்தஅளவிற்கு குவாலிட்டியோடு தற்போதைய சி.எம்.அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார் என தெரிவித்துள்ளார்.
மேக்ரோவா திட்டங்களை கவனிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தோன்றி உள்ளது. அதாவது பாலம் கட்டுவது, சாலை போடுவது, பல்கலைக் கழகம் எழுப்பவது, மருத்துவமனை கட்டுவது இவையெல்லாம் மேக்ரோவா திட்டம்.
மைக்ரோ திட்டங்கள் என்னவென்றால் பள்ளி விட்டு நின்ற குழந்தைகளை மறுபடியும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான 200 கோடிரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இதுதான் மைக்ரோ திட்டம். இவர்கள்தான் நாளைய தூண்கள்.
இதனையும் இந்த அரசு அன்புடன், கருணையுடன், உன்னிப்புடன் கவனிக்கிறது, இலங்கைத் தமிழர்களுக்கான அவர்கள் இருப்பதற்கான உரிமையை இந்த அரசு பெற்றுத் தந்து இருக்கிறது. ரொம்ப கூர்மையா தாய் உள்ளத்துடன் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறது.
நிர்வாகத் திறமை பவர்புல்லா நடந்துவருகிறது. முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும்எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
newstm.in