மோடிக்கே பாடம் எடுத்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலின் புகழாரம்..!

மோடிக்கே பாடம் எடுத்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலின் புகழாரம்..!

Update: 2022-06-06 15:20 GMT

கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “கலைஞர் இன்னும் நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் தான் எனக்கு உள்ளது.

அவரின் எண்ணங்கள் தான் நம்மை எல்லாம் வழிநடத்திச் செல்வதாக உணர்கிறேன். ஒரு தாத்தாவாக அவர் எங்களுக்கு நேரம் தந்ததை விட, ஒரு தலைவராக நம் அனைவருக்காகவும் நேரம் ஒதுக்கி தந்திருக்கிறார்.


அது என்ன திராவிட மாடல் ஆட்சி..? அதற்கு சிறிய விளக்கம் மட்டும் சொல்லுங்கள் என்று பல பேர் கேட்கிறார்கள். 10 நாட்களுக்கு முன்பு நம் பிரதமர் சென்னை வந்திருந்தார்.

அவரை மேடையில் வைத்துக் கொண்டே ‘இது தான் திராவிட மாடல் ஆட்சி; இதுதான் மாநில சுயாட்சி’ என்று மோடிக்கே தைரியமாக வகுப்பு எடுத்தவர் தான் நம் முதல்வர்.

அதேபோல், நம் மாநிலத்திற்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை அவருக்கு வகுப்பெடுத்த இந்தியாவிலேயே ஒரே முதல்வர் என்றால் அது நம் கலைஞர் வழியில் வந்த நம் தலைவர் தான். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வர் என்று பெயர் எடுத்திருக்கிறார்.

நான் நம்பர் ஒன் முதல்வராக இருப்பது போதாது. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என்று தலைவர் சொல்லி இருக்கிறார். அதற்காக அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து உழைக்கிறார்கள்.

இளைஞர் அணி நிர்வாகிகளாகிய நாம், அவர்களோடு ஒருங்கிணைந்து கழக பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Similar News