விடுமுறையில் குஷியாக இருக்க முதலமைச்சரின் சூப்பர் திட்டம்!!

விடுமுறையில் குஷியாக இருக்க முதலமைச்சரின் சூப்பர் திட்டம்!!

Update: 2022-06-04 18:47 GMT

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்துக்காக கார்டெலியா க்ரூஸ் (Cordelia Cruise) என்ற சொகுசுக் கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டம் ஒன்று உள்ளது.

அதே போல் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா என இரண்டு பேக்கேஜ்களில் சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது.

இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்துக்குள் உணவு, தங்கும் செலவும் அடங்கும். 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம் உள்ளது.

மேலும் 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

ஒரே நேரத்தில் 1500 முதல் 2000 பயணிகள், மற்றும் 800 ஊழியர்களை இந்த கப்பல் சுமந்து செல்லவுள்ளது. முதற்கட்டமாக ஒரு கப்பல் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் மேலும் 3 கப்பல்களை இயக்கவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News