குழந்தை விற்பனை – 6 பேர் மீது வழக்கு!!

குழந்தை விற்பனை – 6 பேர் மீது வழக்கு!!

Update: 2022-03-19 08:30 GMT

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் அருகே அப்பநாயக்கன்பட்டி சேர்ந்த சுந்தரலிங்கம் கோமதி தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே அவர்களது உறவினர் மகேஸ்வரி என்பவர் மூலமாக சேலம் மாவட்டம் புளியங்காடை சேர்ந்த  அண்ணாமலை அம்பிகா தம்பதிக்கு  மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை கேட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அண்ணாமலை அம்பிகா தம்பதி  45,000 ரூபாய்க்கு தங்களது 3வது ஆண் குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அண்ணாமலை, மகேஸ்வரி மற்றும் குழந்தையை வாங்கிய சுந்தரலிங்கம்-கோமதி தம்பதி உள்ளிட்ட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

newstm.in

Similar News