நடுவானில் சில்மிஷம்... அதிரடி காட்டிய இளம்பெண்!!

நடுவானில் சில்மிஷம்... அதிரடி காட்டிய இளம்பெண்!!

Update: 2022-06-20 20:28 GMT

சவுதி அரேபியாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர் பயணித்தார்.

அவருடைய இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் 45 வயது ஆண் பயணி ஒருவர் அமர்ந்திருந்தார். தஞ்சையை சேர்ந்த அவர் சவுதி அரேபியாவில் மருத்துவராக பணியாற்றுகிறார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, மருத்துவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண் விமானத்திலேயே கூச்சல் போட்டு, விமான பணிப்பெண்கள் இடமும் புகார் தெரிவித்தார். அவர்கள் விமானியிடம் தகவல் தெரிவித்தனர். அதோடு அந்த ஆண் பயணியை, விமான பணிப்பெண்கள் கடுமையாக எச்சரிக்கவும் செய்தனர்.

இந்த நிலையில் விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அந்தப் பெண் பயணி, விமான ஊழியர்களின் உதவியுடன், அந்த மருத்துவரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் செய்தார்.

விசாரணையில் வேண்டுமென்றே சில்மிஷம் செய்யவில்லை, தூக்கத்தில் தெரியாமல் என் கை பட்டு விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார்.

இதையடுத்து அந்த பெண் பயணி, மருத்துவரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, போலீஸில் அளித்த புகாரை திரும்பப் பெற்றார். இதையடுத்து இருவரும் சமரசமாக காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனா்.

newstm.in

Similar News