ஆன்லைன் வழியே தேர்வு.. கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்..!

ஆன்லைன் வழியே தேர்வு.. கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்..!

Update: 2022-02-23 13:54 GMT

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும், தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி காரைக்காலைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காரைக்கால் அரசலாறு மதகடி பாலம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News