குடியுரிமை திருத்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்.. அமித் ஷா உறுதி

குடியுரிமை திருத்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்.. அமித் ஷா உறுதி

Update: 2022-05-06 10:16 GMT

கொரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹிங்கால்கன்ஜ் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையின் ரோந்துப் படகுகள், படகு ஆம்புலன்ஸ் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்த ரோந்துப் படகுகள் சுந்தர்பன்ஸ் பகுதியில் மிதக்கும் பாதுகாப்பு நிலைகளாக செயல்படும்.

சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி வதந்தி பரப்பி வருகிறது. கொரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்.

ஊடுருவல் தொடர்வதை மம்தா பானர்ஜி விரும்புகிறாரா? ஆனால் சிஏஏ நிச்சயம் அமல்படுத்தப்படும். இதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியாது, என உரையாற்றினார். 

பின்னர், ஹரிதாஸ்பூரில் மைத்ரி சங்ரஹாலயா அருங்காட்சியகத்துக்கும் அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இந்த அருங்காட்சியகம், கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த போது எல்லை பாதுகாப்புப் படையினரின் வீரதீர செயல்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
 
newstm.in

Tags:    

Similar News