மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!!
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!!
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், அதே பள்ளியில் படித்த மாணவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த இளைஞர் மாணவியுடன் செல்பி எடுத்துள்ளார்.
இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மாணவியுடன் 10ஆம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவர், அந்த செல்பி புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி நடந்ததை தனது தாயிடம் கூறினார்.
அதிர்ச்சியடைந்த அந்த தாய், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் அவர்களது செல்போனை சோதித்த போது அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது.
இதையடுத்து 3 மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்ததாக முன்னாள் மாணவர் உட்பட என 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
newstm.in