அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட கோவை முதியவர் மரணம்..!

அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட கோவை முதியவர் மரணம்..!

Update: 2022-02-16 05:00 GMT

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட 105 வயது முதியவர் வயோதிகத்தின் காரணமாக உயிரிழந்தார்.

கோவை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 1916-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி பிறந்தவர்.  இவரது பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அவரது பெற்றோர் ஓலைச் சுவடியில் தமிழில் எழுதி வைத்திருந்தனர். இதனால் அவரது வயது சரியாகத் தெரியவந்தது.

1952 முதல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளார் 105 வயதான மாரப்ப கவுண்டர்.

விவசாயியான இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் பார்த்துள்ளார். வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டுப் போட ஆர்வமாக இருந்தார்.

இந்த நிலையில், வயோதிகத்தின் காரணமாக அவர் காலமானார். 105 வயது 8 எட்டு மாதத்தில் மாரப்ப கவுண்டர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாரப்ப கவுண்டரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Similar News