'சாரி' அம்மா உன்ன விட்டு போறதுக்கு - கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை..!!

'சாரி' அம்மா உன்ன விட்டு போறதுக்கு - கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை..!!

Update: 2022-03-14 05:30 GMT

தென்காசி மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த கணேசன் மாடத்தி தம்பதியினரின் மூத்த மகள் இந்துப்பிரியா, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில், கல்லூரிக்கு சில மாணவிகள் செல்போன் கொண்டுவந்ததாகவும், அதனை இந்துப்பிரியா வாங்கி பார்த்த போது இரண்டு பேராசிரியர்கள்  திட்டி மன்னிப்பு கடிதம் எழுத கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த இந்துப்பிரியா தனது மரணத்திற்கு பேராசிரியர்கள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவி எழுதியதாக கூறப்படும் 2 பக்க கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News