எலிக்கு வைத்த பொறியில் மாட்டிய கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு..!!
எலிக்கு வைத்த பொறியில் மாட்டிய கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு..!!
கோவை மாவட்டம் நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தேவசித்து என்பவரது மனைவி கிரேஷி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இவரது மகள் எனிமா ஜாக்குலின் (வயது 19) பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி பசியாக இருக்கு என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது அவர் நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடு என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் மளிகை கடையில் இருந்த எலிகள் தொல்லை காரணமாக கேரட் மீது பூச்சி மருந்து தெளித்து வைத்துள்ளனர். இதை அறியாத எனிமா ஜாக்குலின் மருந்து தெளித்த கேரட் ஒன்றை எடுத்து சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த ஜாக்குலின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.