மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி..!!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி..!!

Update: 2022-05-29 04:20 GMT

இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநிலக் கல்லூரி மாணவன் நீதிதேவன்(19), சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் வந்து கொண்டு இருந்தார். திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை - வேப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுவதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில் நீதிதேவன் உள்பட சில மாணவர்கள் ஓடும் ரயிலில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டும், மேற்கூரையை பிடித்துக்கொண்டும் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். கால்களை நீட்டியபடியும், கூச்சலிட்டபடியும் மின்சார ரயிலில் அவர்கள் பயணம் மேற்கொண்ட அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்ந்து மாணவர்கள் பேருந்து ரயில்களில் சாகசம் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்ததை மீறியும் மாணவர்கள் இதுபோன்ற சாகசத்தை மேற்கொண்டு உயிரிழப்பது வேதனை அடையச் செய்துள்ளது.

Similar News