ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவி கொலை!!

ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவி கொலை!!

Update: 2022-04-10 18:55 GMT

 19 வயது இளம் பெண் ஒருவர் சக கல்லூரி மாணவர்களால் விஷம் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹலினா பகுதியில் 19 வயது இளம்பெண் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். அவர் பரத்பூர் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார்.

அவருடன் படிக்கும் 5 மாணவர்கள் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மாணவி மறுத்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியை அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவியை பின்தொடர்ந்த அந்த 5 பேரும் கட்டாயப்படுத்தி ஒரு திரவத்தை குடிக்க வைத்தனர்.

வீட்டிற்கு சென்றதும் மாணவி வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் முடிவுகளுக்காகவும் காவல்துறை காத்திருக்கிறது.

newstm.in

Similar News