“காமெடி பண்ணாதீங்க பாஸ்..” - அண்ணாமலையை கலாய்த்த சு.வெங்கடேசன் !!
“காமெடி பண்ணாதீங்க பாஸ்..” - அண்ணாமலையை கலாய்த்த சு.வெங்கடேசன் !!
சென்னையில் பிரதமர் கலந்துகொண்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவை, பெருமை குறித்து பேசினார். இது பாஜக தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், திருச்சியில் நடைபெறும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (DREU) மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி., வெங்கடேசன் கலந்துகொண்டார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றப்போது திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் மாநிலத்தின் உரிமை சார்ந்த விஷயத்தை பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதற்கு மேடையிலேயே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
மேலும், கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக-காங்கிரஸ் அதை பாஜக மீட்க வேண்டுமா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியது தொடர்பாக செய்திகள் கேட்டதற்கு, பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் உரிமைக்காக இவர்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கிறார்கள் என்பது பின்னோக்கி சென்று பார்த்தால் தெரியும்.
அதற்காக சட்டத்தை வளைத்தும், சட்டங்களை புதிதாக உருவாக்கியும் இருக்கிறார்கள். அதேபோல, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு. அதை தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜக மீட்டுத் தர வேண்டும். இலங்கை தமிழர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார் என்ற கேள்விக்கு காமெடி பண்ணாதீங்க பாஸ் என சிரித்தபடி பதிலளித்துவிட்டு சென்றார்.
newstm.in