வருகிறது இ பாஸ்போர்ட்: வெளிநாடு செல்வோருக்கு இனிப்பான செய்தி !!
வருகிறது இ பாஸ்போர்ட்: வெளிநாடு செல்வோருக்கு இனிப்பான செய்தி !!
வெளிநாடு செல்வோரின் வசதிக்காக சிறப்பு வடிவிலான இ - பாஸ்போர்ட் வசதி இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தற்போது மத்திய நிதிநிலை அறிக்கைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இ - பாஸ்போர்ட் வசதி குறித்த அறிவிப்பை பார்க்கப்படுகிறது.
அதாவது, சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட் திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் இ பாஸ்போர்ட்கள், ஏடிஎம் கார்டுகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சிப்பில் சம்மந்தப்பட்டவர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும். மலேசியாவில்தான் முதல் முறையாக இந்த இ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குகள் ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தபால் துறையை வங்கிகள் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
newstm.in