ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வரணும்.. கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வரணும்.. கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Update: 2022-03-09 12:51 GMT

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இதனிடையே, நடப்பாண்டு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வருகிற 19-ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதே நேரம், வரும் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Similar News