தளபதி ரசிகர்களே..!! இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு ரெடியா இருங்க..!!
தளபதி ரசிகர்களே..!! இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு ரெடியா இருங்க..!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய்யின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார், துணை நடிகர்களில் யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஷிவா அரவிந்த் மற்றும் பலர் உள்ளனர்.
இதையடுத்து அனிரூத் இசையில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடலின் ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் ‘அரபிக் குத்து’ பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டு உள்ளனர் .
Lyric video of THE MUCH AWAITED #ArabicKuthu is releasing Today @ 6 PM!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast #ArabicKuthuFromToday #BeastFirstSingle pic.twitter.com/zpVBuAGwjQ
— Sun Pictures (@sunpictures) February 14, 2022
சிவகார்த்திகேயனால் எழுதப்பட்டு, அனிருத் இசையமைத்த, அரேபி குத்து பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.\