கமிஷன் கட்.. 30 ரவுடிகளை ஏவி மதுபானப் பாரை சூறையாடிய காவல்துறை அதிகாரிகள் !!
கமிஷன் கட்.. 30 ரவுடிகளை ஏவி மதுபானப் பாரை சூறையாடிய காவல்துறை அதிகாரிகள் !!
30 ரவுடிகளை ஏவி மதுபானப் பாரை சூறையாடிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி- புங்கனூர் சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே கலால் துறைக்குச் சொந்தமான மதுபானக் குடோன் உள்ளது. அதன் கண்காணிப்பாளராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர்பாபு பணியாற்றி வந்தார். அவருடன் அதே குடோனில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் என்பவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், மதனப்பள்ளி பகுதியில் மதுபானப் பாருடன் கூடிய ஓட்டல் உள்ளது. அதன் உரிமையாளர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றதால், அந்தப் பாரை அப்பகுதியைச் சேர்ந்த சோமு என்பவர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருடன் ரகசியமாக கூட்டணி அமைத்து நடத்தி வந்தார். இதில் மற்றொரு கூட்டாளி வெங்கடசிவபிரசாத் ஆவார்.
இந்த நிலையில், மதுபானப் பாருக்கு தேவையானப் பொருட்களை கொண்டு வருவது தொடர்பாக வெங்கடசிவபிரசாத், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வெங்கடசிவபிரசாத் பார் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் மூலம் இந்த தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியார் சேர்ந்து வெங்கடசிவபிரசாத் பழிவாங்க திட்டம்போட்டனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி தனக்கு தெரிந்த 30 ரவுடிகளுடன் வந்து வெங்கடசிவபிரசாத்தை தாக்கினார். அதோடு மதுபானப் பாரை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரும் சேர்ந்து ரவுடிகளை ஏவி வெங்கடசிவபிரசாத்தை தாக்கியது அம்பலமானது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 30 ரவுடிகளையும் தேடி வருகின்றனர்.
newstm.in