எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறப்போகும் நிறுவனம்!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறப்போகும் நிறுவனம்!!
ஒகினாவா நிறுவனம் விற்பனை செய்த 3,215 மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப்பெற்று, சரி செய்து தர உள்ளதாக அறிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தீ விபத்து தொடர்பாக ஆய்வு நடத்திய ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் 3,215 ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற்று சர்வீஸ் செய்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றிய விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய அச்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே வாடிக்கையாளர்களின் அச்சத்தை நீக்கும் வகையில் ஒகினாவா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
It started out as random & sporadic but now cases of #ElectricVehicles on fire are surfacing with increasing frequency. Just as I had feared.
— Sumant Banerji (@sumantbanerji) April 11, 2022
Last Saturday, 20 #electricscooters from #JitendraEV were gutted near Nashik in a trailer.
It'll get worse before it gets better.#EV pic.twitter.com/2G5ZFXqBfn
இதன் படி தனது ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஹெல்த் செக் அப் முகாமை ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் நடத்த உள்ளது. 3,215 யூனிட் பிரைஸ் ப்ரோ ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்று, அதில் பேட்டரி தொடர்பாக ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என ஒகினாவா நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.
அப்போது பேட்டரி அல்லது லூஸ் கனெக்டர்கள் போன்ற ஏதாவது பிரச்சனைகல் இருந்தால் இந்தியா முழுவதும் உள்ள ஒகினாவா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் இலவசமாக அதனை சரி செய்து கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைச் செயல்படுத்த, ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், தனது டீலர்களுடன் இணைந்து பிரத்யேகமாக நடத்த உள்ள இந்த பழுது நீக்கும் முகாமில் கட்டாயம் பங்கேற்கு படி ஒவ்வொரு ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களையும் தனித்தனியே தொடர்பு கொண்டு அறிவிக்க உள்ளது.
newstm.in