பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டஈடு.. அரசு அதிரடி நடவடிக்கை..!
பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டஈடு.. அரசு அதிரடி நடவடிக்கை..!
சமீபத்தில், முப்படையில் அக்னிபத் என்ற புதிய வேலை வாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் ரயில், பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். ஏராளமான பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த சேதத்துக்கான தொகையை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து வாரணாசி மாவட்ட கலெக்டர் கௌஷல் ராஜ் சர்மா கூறியதாவது: “வாரணாசி மாவட்டத்தில் ஜூன் 17-ம் தேதி போராட்டக்காரர்கள் 36 பஸ்களை எரித்துள்ளனர். இதனால், அரசுக்கு 12.97 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சேதத்தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களை எரித்த 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய புகைப்படங்களும், வீடியோ ஆதாரங்களும் பிரயாக்ராஜ் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.