முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு !!

முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு !!

Update: 2022-04-04 17:15 GMT

முன்னாள் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இமானின் விவாகரத்து அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தற்போது இமான் தன்னுடைய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதில், குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து, முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றதாக டி.இமான் புகார் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இசையமைப்பாளர் டி.இமான் - மோனிகா தம்பதி கடந்த ஆண்டு விவகாரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:    

Similar News