இன்று முதல் கட்டாயம்.. அரசு அதிரடி உத்தரவு..!

இன்று முதல் கட்டாயம்.. அரசு அதிரடி உத்தரவு..!

Update: 2022-07-06 05:55 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகிறது.

முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை நகர மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.

இதனால், சென்னை மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று  முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News