அரசு ஊழியர்களுக்கு சலுகை.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..!

அரசு ஊழியர்களுக்கு சலுகை.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Update: 2022-02-03 19:15 GMT

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு சலுகை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யா கூறியதாவது: “மத்திய அரசு அதன் பணியாளர்களின் ஊதியத்தில் 14 சதவீதத்தை என்.பி.எஸ். எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கிறது. இந்தத் தொகைக்கு மத்திய அரசு பணியாளர் வரி விலக்கு சலுகை பெறுகின்றனர்.

அதே சமயம், மாநில அரசுகள் அதன் ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை மட்டுமே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கின்றன. இதற்கு, மாநில அரசு பணியாளர்கள் வரி விலக்கு சலுகை பெறுகின்றனர்.

இந்த பாகுபாட்டை நீக்கி, மத்திய அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும் வரி விலக்கு சலுகையைப் போல, மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பெறும் வரி விலக்கு சலுகை வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க இந்த அறிவிப்பு, மத்திய அரசு பணியாளர்கள் பெறும் சமூக பாதுகாப்பு பயன்களை, மாநில அரசு ஊழியர்களும் பெற வழிவகை செய்துள்ளது” என்று அவர் கூறினார்.

Similar News