ஆந்திராவிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல்!!
ஆந்திராவிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல்!!
ஆந்திர மாநிலம் கர்னூலில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் 15 காயமடைந்தனர்.
ஹோலகுன்டா பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் அப்பகுதியில் உள்ள மசூதியை கடந்து சென்றது.
ஊர்வலத்தில் ஒலிப்பெருக்கிகளை வைத்து பாடல்கள் பாடி, கோஷங்களை எழுப்பு கடந்த சென்றதாகவும், அப்போது இந்த ஊர்வலத்தில் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இரு தரப்பும் மாறி மாறி கற்களை வீசியும் கோஷங்களை எழுப்பியும் மோதிக் கொண்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விஷ்வ இந்து பரிஷத் நபர்களை சம்பவிடத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டனர்.
இதையடுத்து மோதல் நிறுத்தப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது. இந்த மோதலில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்டதாக 20 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
அப்பகுதியில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றன. அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்து, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலத்தில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்த கலவரமான நிலையில், ஆந்திராவிலும் இதுபோன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
newstm.in