காங். எம்எல்ஏ விஜயதாரணிக்கு மலர்களைக் கொடுத்து நன்றி தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் !!

காங். எம்எல்ஏ விஜயதாரணிக்கு மலர்களைக் கொடுத்து நன்றி தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் !!

Update: 2022-04-07 10:25 GMT

தாலிக்கு தங்கம் திட்டத்தைச் செயல்படுத்த கோரிக்கை விடுத்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணிக்கு, அதிமுக உறுப்பினர்கள் மலர்களை கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

சட்டமன்றத்தில் நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, திருமண நிதியுதவித் திட்டம் குறித்து பேசினாா்.  பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. 1.000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் மிகவும் வரவேற்கக்கூடியது. அதே வேளையில், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தை கைவிட வேண்டாம். அந்த திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.

ஊரகப் பகுதிகளில் மினி கிளினிக் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் ஆவை இல்லாததால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் மக்கள் செல்ல வேண்டி உள்ளது என்றார்.

தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த விவாதத்தில் கோரிக்கை வைத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு, அதிமுக உறுப்பினர்கள் அவர்களது மேஜைகளில் இருந்த மலர்களைக்

விஜயதரணியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் மேஜையைத் தட்டி வரவேற்பு அளித்தனா். மேலும், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை தொடங்குவதன் முதல் நாள் என்பதால் உறுப்பினா்கள் அனைவரின் இருக்கையிலும் ஒற்றை ரோஜா வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒற்றை ரோஜாக்கள் சிலவற்றை மொத்தமாகச் சோ்த்து தங்களது அரசின் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் விஜயதரணிக்கு அதிமுக உறுப்பினா்கள் கொடுத்து நன்றி தெரிவித்தனர்.


newstm.in

Similar News