ஒற்றை வரியில் தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்… குவியும் பாராட்டு!!
ஒற்றை வரியில் தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்… குவியும் பாராட்டு!!
தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கருத்து தெரிவித்ததை அடுத்து அவரை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும்' என்று பேசி இருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்றார்.
அவரிடம் இந்தியாவிற்கு இந்தி தான் இணைப்பு மொழி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஹ்மான், தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.
அவரது இந்த பதிலை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரஹ்மானை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
newstm.in