காங்கிரஸ் பிரமுகர் கழுத்து அறுத்து கொலை.. காரணம் என்ன.. போலீஸ் விசாரணை..!
காங்கிரஸ் பிரமுகர் கழுத்து அறுத்து கொலை.. காரணம் என்ன.. போலீஸ் விசாரணை..!
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம், பிடதி தாலுகா, பைரவனோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணப்பா (60). காங்கிரஸ் பிரமுகரான இவர் தனது கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும், அந்த பண்ணை வீட்டில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் வேலையும் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு அந்த பண்ணை வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மணப்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை மணப்பா கொலை செய்யப்பட்டது பற்றி பிடதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ணை வீட்டிற்குச் சென்ற போலீசார் மணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணப்பாவை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.