தொடரும் சோகம்.. உயிரிழந்த மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்!!
தொடரும் சோகம்.. உயிரிழந்த மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்!!
ஆந்திரா மாநிலம் நாயுடு பேட்டை அடுத்த கொத்தபள்ளி பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை அக்சயா, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
மகளை எப்படியும் உயிர் உயிர் பிழைக்க வைக்கலாம் என்ற ஆசையில் பெற்றோர்கள் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் சிறுமி அக்சயாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்த தந்தை சொந்த ஊருக்கு மகளின் உடலை எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்திருக்கிறார்கள். இதை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் இடம் கேட்க அவர்கள் அதிக வாடகை கேட்டு இருக்கிறார்கள். அதனால் ஆட்டோவில் கொண்டு செல்லலாம் என்று ஆட்டோவை கேட்க, ஆட்டோக்காரர்கள் உடலை எடுத்துச் செல்ல முடியாது என்று மறுத்திருக்கிறார்கள்.
செய்வதறியாத தந்தை, மகளின் உடலை மருத்துவமனையில் இருந்து கொத்தப்பள்ளிக்கு பைக்கிலேயே கொண்டு சென்றுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆந்திராவில் அடுத்தடுத்து மூன்று முறை இந்த அவலம் நடந்திருக்கிறது.