சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் அட்லியின் பதிவு!!
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் அட்லியின் பதிவு!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் அட்லி வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அட்லி, பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க திட்டமிட்டார். கதையை சொல்லி ஷாருக்கானிடமும் கால்ஷீட்டும் வாங்கினார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதற்குள் ஷாருக் கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிக்கல்களை சந்தித்தார்.
இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்ததை அடுத்து படப்பிடிப்பு கால்ஷீட் ஒதுக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஷாருக்கான் வேறு இயக்குனர்களின் படங்களுக்கு தேதிகளை ஒதுக்கி நடித்து வருகிறார்.
இதனால் இயக்குனர் அட்லி அட்செட்டாகி உள்ளார். இந்நிலையில் அட்லியின் தற்போதைய இன்ஸ்டாகிராம் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கேப்ஷனாக, உங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள், அதற்காக வருத்தப்படும் காலம் ஒன்று வரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ஷாருக்கானை குறிப்பிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
newstm.in