சர்ச்சை! கேள்வி கேட்ட நிருபரை கேவலமாக பேசிய பாபா ராம் தேவ்!!
சர்ச்சை! கேள்வி கேட்ட நிருபரை கேவலமாக பேசிய பாபா ராம் தேவ்!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை பாபா ராம்தேவ் கேவலமாக பேசி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாபா ராம்தேவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர்ஸ, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பெட்ரோல், 40 ரூபாய்க்கு குறைந்துவிடும். சமையல் எரிவாயு ரூ.300-ஐ தாண்டாது என பேசியிருந்தார்.
இந்நிலையில் பாபா ராம்தேவ் ஹரியானா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் ஒருவர், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40, கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.300 என்று குறைப்பவர்கள் ஆட்சிக்கு வர மக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே, எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராம்தேவ், நான்தான் சொன்னேன். அதற்கென்ன? உன்னால் என்ன செய்ய முடியும்? இது மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டாம். நான் என்ன நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? என்று கடுமையாகப் பேசினார்.
நிருபர் மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கவே, ராம்தேவ் ஆத்திரமடைந்து, "நான்தான் அன்று சொன்னேன். நீ வாயை மூடு, நீ நல்ல பெற்றோருக்குத் தான் பிறந்திருப்பாய் என நினைக்கிறேன் என்று காட்டமாகக் கூறினார்.
Yoga Guru Ramdev was seen on camera losing his cool and threatening a journalist, who asked him about his comments in the past on reducing petrol price. @ndtv pic.twitter.com/kHYUs49umx
— Mohammad Ghazali (@ghazalimohammad) March 30, 2022
விலையுயர்வை ஆதரித்துப் பேசிய ராம்தேவ், எரிபொருள் விலை குறைந்தால் வரி கிடைக்காது என அரசாங்கம் சொல்கிறது. வரி கிடைக்காவிட்டால் தேசத்தை எப்படி வழிநடத்துவது. சாலைகள் எங்கிருந்து வரும் என்று கேள்வி எழுப்பினார்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எப்படி கொடுக்க முடியும். விலைவாசி குறையவேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மக்களும் கடுமையாக உழைக்க வேண்டுமல்லவா எனப் பேசியுள்ளார்.
newstm.in