சர்ச்சை! கோவில் பணியாளரை எட்டி உதைத்த அதிகாரி!! VIDEO

சர்ச்சை! கோவில் பணியாளரை எட்டி உதைத்த அதிகாரி!! VIDEO

Update: 2022-05-21 10:15 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக செயல் அலுவலர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் ஆண்டாள் கோவிலில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் கர்ணன் என்பவருக்கு ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருவதாகவும்,  உடல் ரீதியான பிரச்சனைகள் செயல் அலுவலரிடம் தெரிவித்தும் வேண்டுமென்றே  இரவு பணி  வழங்கப்படுவதாக கூறினார்.

இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிகாரிகள் பணியாட்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்து வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும் , தெரிவிக்கின்றனர்.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

இந்த சூழ்நிலையில் கோவில் கணக்கர் சுப்பையா என்பவர் பணியாட்கள் இருக்கும்பொழுதே எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செயல் அலுவலர் பணியாளர்கள் முன்னிலையில் அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் பொழுது அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Similar News