சர்ச்சை.. டெல்லி முதல்வர் வீட்டை தாக்கிய பாஜகவினருக்கு கட்சி சார்பில் பாராட்டு விழா !!

சர்ச்சை.. டெல்லி முதல்வர் வீட்டை தாக்கிய பாஜகவினருக்கு கட்சி சார்பில் பாராட்டு விழா !!

Update: 2022-04-16 10:00 GMT

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்குதல் நடத்திய பா.ஜ.கவினருக்கு அக்கட்சி பாராட்டு விழா நடத்தியது சர்ச்சையாகியுள்ளது. 

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய கெஜ்ரிவால், 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். அப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க இயலாது, யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தால் அனைவரும் பார்க்கலாம் என கூறினார். 

இதற்கு, பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக, பா.ஜகவினர் திரண்டு போராட்டம் நடத்தினர். கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். வீட்டின் மீது கல்லெறிந்து தாக்கினர்.

இதையடுத்து, டெல்லி போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், எட்டு பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து. இன்று சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
அவர்களுக்கு பா.ஜ.க இளைஞர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை அளித்து வரவேற்றதுடன். பாராட்டு விழாவும் நடத்தினர். இதன் மூலம் பா.ஜ.கவின் உண்மை முகம் தெரிவிந்துவிட்டதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.


newstm.in

    

Tags:    

Similar News