வெடித்த சர்ச்சை.. விராட் கோலியின் மனைவி அனுஷ்காவை விமர்சித்த பிரபல நடிகர் !
வெடித்த சர்ச்சை.. விராட் கோலியின் மனைவி அனுஷ்காவை விமர்சித்த பிரபல நடிகர் !
விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும நிலையில், அதனை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பாலிவுட் நடிகர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாதது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. அதன் தாக்கம் நடப்பு ஐபிஎல் சீசனிலும் தொடர்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி அவரால் பெரிய ஸ்கோர் அடிக்கமுடியவில்லை. தொடர்ந்து திணறி வருகிறார்.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளிலும் சேர்ந்து 128 ரன்கள் மட்டுமே கோலி அடித்துள்ளார். இந்த நிலையில், இதனை சுட்டிக்காட்டி அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை பிரபல நடிகர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் கே.ஆர்.கே தனது ட்விட்டர் பதிவில், 'விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இதனால் அனுஷ்காவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும். அவரை திருமணம் செய்த பிறகுதான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது, என்று ட்வீட் போட இது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த ட்வீட்டுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் கோலியின் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் கேஆர்கே அந்த ட்விட்டை நீக்கி விட்டார். பாலிவுட் நடிகர் கேஆர்கே அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது வழக்கமானதாகிவிட்டது. இதற்காக அவரது சமூக வலைத்தளப் பக்கங்கள் பலமுறை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in